ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கொமராபாளையத்தில் மாகாளியம்மன் கம்பம் மற்றும் பொங்கல் திருவிழா கடந்த 21ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 28ம் தேதி கம்பம் நடப்பட்டு பக்தர்கள் கம்பத்தை சுற்றி கம்பத்தாட்டம் ஆடி வந்தனர். அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. வடக்குப்பேட்டை தண்டு மாரியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் அழகு குத்தி தேர் இழுத்து வந்தனர். தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழா, திரு விளக்கு பூஜையும், இன்று வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சியும், வரும் 08ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.