ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயிலில் கடந்த வாரம் நடைபெற்ற திருவிழாவில் பக்தர்கள் காணிக்கையாக ரூ. 39 லட்சத்து 89 ஆயிரத்து 151 செலுத்தியுள்ளனர். மேலும், 55 கிராம் தங்கமும், 66 கிராம் வெள்ளியும் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. இந்து அறநிலையத்துறை அதிகாரி நந்தகுமார் தலைமையில் இந்த காணிக்கைகள் எண்ணப்பட்டன.