சத்தியமங்கலம் வட்ட அரசு மதுக்கடைகள் 2 நாட்களாக மூடப்பட்டதால், கே.என்.பாளையம் நால்ரோடு அருகே உள்ள தனியார் மதுக்கடையில் கடம்பூர் மலை கிராமம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் மது வாங்க குவிந்தனர். இதனால் அப்பகுதியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, சாலைகளில் வாகனங்கள் செல்ல சிரமமடைந்ததாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர். மக்களுக்குப் பிரச்சனை இல்லாத இடத்தில் மதுக்கடைகளை மீண்டும் திறக்க வேண்டும் என குடிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.