பெத்லேகம் என்ற இடத்தில் மாட்டுத் தொழுவத்தில் மாதாவின் வயிற்றில் இருந்து பிறந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் வகையில் தேவாலயத்தில் குடில் அமைக்கப்பட்டிருந்தது. அதில் குழந்தை இயேசுவின் சிலை வைக்கப்பட்டிருந்தது. பிரார்த்தனைக்கு முன்னர், குழந்தை இயேசு சிலை பவனியாக எடுத்து வந்து குடிலில் வைக்கப்பட்டது.
தொடர்ந்து, திருப்பலி எனப்படும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளானோர் பங்கேற்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புனித அமலான்னை ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிறப்பு பிரார்த்தனை முடிந்த பின்னர் அனைவரும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.