தாளவாடி: காட்டெருமை தாக்கி கார் நொறுங்கியது

தாளவாடி அடுத்த மல்லங்குழி கிராமத்தைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (34) நேற்று (மே 22) மதியம் கோவையில் இருந்து தாளவாடி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். ஆசனூர் அருகே வனப்பகுதியில் இருந்து திடீரென காட்டெருமை காரின் முன் பக்கம் மோதியதில் கார் பலத்த சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக, காரில் பயணித்த ஸ்டீபன் ராஜ் காயமின்றி தப்பினார். இந்த சம்பவம் குறித்து ஆசனூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி