மேலும் ஹரிஹரன் தலைமையில் 8 பேர் பள்ளிக்குச் சென்று முதல்வரிடம், மாணவர்களுக்கு மதமாற்ற புத்தகம் வழங்கியதாக கூறி விளக்கம் கேட்டுள்ளனர். மேலும் இதைக் கண்டித்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பள்ளியின் முதல்வர், புஞ்சைபுளியம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பள்ளி வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்தல், பள்ளி முதல்வரை மிரட்டுதல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிஹரனை கைது செய்தனர். மேலும் 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.