பண்ணாரி - திம்பம் ரோட்டில் கரடிகள் நடமாட்டம்

சத்தி - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. ரோட்டின் இருபுறமும் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. 

இங்குள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. வனவிலங்குகள் அடிக்கடி ரோட்டை கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் பண்ணாரி செக் போஸ்டில் இருந்து - திம்பம் மலைப்பாதை செல்லும் வழியில் விநாயகர் கோயில் அருகே விளையாடிக் கொண்டு கரடிகள் இரண்டு சாலை கடந்து சென்றது. 

இது குறித்து செக் போஸ்டில் இருந்த வனத்துறை அதிகாரிகளிடம் வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்ல வேண்டுமென வனத்துறையினர் அறிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி