இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். கூட்டத்தில் வருகிற மே மாதம் முதல் வாரத்தில் கூடுதல் நண்பர்களோடு குடும்பத்தாருடன் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தவும், 2028-ஆம் ஆண்டு பொன்விழா ஆண்டாக கொண்டாடவும், தற்போது உள்ள ஆசிரியர்களான கந்தசாமி, முருகன், சண்முகம், சண்முகவேல், தேவதாஸ் ஆகியோரை அழைத்து மரியாதை செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் இறந்துபோன ராமலிங்கம், பர்னபாசு, தண்டபாணி, பொன்னுசாமி, மயில்சாமி, நாகராஜ், சந்திரசேகரன், கிருஷ்ணமூர்த்தி, பழனிசாமி, மற்றும் சின்னராஜ் ஆகியோர் மறைவுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சுமார் 52 நண்பர்களை தேடி கண்டுபிடித்தனர். இதில் சுமார் 21 பேர் பங்கேற்றனர். முடிவில் மரகதம் நன்றி கூறினார்.