ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு நேற்று முன்தினம் 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், நேற்று மேலும் 1500 கன அடி தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 96.71 அடியாகவும், சேமிப்பு 26.23 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு 286 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து மொத்தம் 2400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதில் கீழ்பவானி வாய்க்காலுக்கு 1500 கன அடி, ஆற்றில் 800 கன அடி, குடிநீருக்காக 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 11-01-2026 அன்று காலை 8 மணி நிலவரப்படி இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மழையளவு 1.0 மிமீ பதிவாகியுள்ளது.