திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில், மக்காச்சோளம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் டிரைவர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை, 27 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது. 

நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில், கர்நாடக மாநிலம் மைசூரு விலிருந்து மக்காச்சோளம் லோடு ஏற்றிக்கொண்டு, பல்லடம் நோக்கிச் செல்ல திம்பம் மலைப்பாதை வழியாக நேற்று (டிசம்பர் 25) காலை 11:00 மணிக்கு லாரி வந்துகொண்டிருந்தது. இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் வரும்போது, லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத் தடுப்பு சுவற்றில் மோதி கவிழ்ந்தது. 

லாரி டிரைவர் குதித்து உயிர் தப்பினார். லாரி கவிழ்ந்த விபத்தால், திம்பம் மலைப்பாதையில், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சத்தியமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர். திம்பம் மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து, மக்காச்சோளத்துடன் கவிழ்ந்த லாரியால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி