ஆசனூர்: நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த யானை

சத்தி புலிகள் காப்பகத்திற்குள் பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. யானைகள் அவ்வப்போது மைசூர் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும்போது வனப்பகுதி ஓரமாக நடமாடுவது வழக்கம். அதன்படி நேற்று ஆசனூர் வனப்பகுதியில் இருந்து ஒற்றை யானை வெளியேறியது. பின்னர் இந்த யானை மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அந்த வழியாக கார், இருசக்கர வாகனங்களைத் துரத்தியது. 

பின்னர் யானை ரோட்டில் வாகனங்களை வழிமறித்து நின்று கொண்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு யானை தானாகவே வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பின்னரே வாகனங்கள் அங்கிருந்து சென்றன. இதனால் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி