சத்தியமங்கலத்திலிருந்து தாளவாடி செல்லும் மலைப்பாதையில், 19வது கொண்டை ஊசி வளைவில் நேற்று (நவ.12) காலை ஒரு சிறுத்தை சாலையில் பதுங்கிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அங்கிருந்த சிறுத்தை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. வாகன ஓட்டிகள் தங்கள் செல்போன்களில் சிறுத்தையின் படங்களை எடுத்தனர்.