சத்தியமங்கலம்: சாலை ஓரத்தில் சிறுத்தை: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் சிறுத்தை ஒன்று சாலை ஓரத்தில் படுத்திருந்தது. தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் சென்ற காரில் சென்றவர்கள் இதை செல்போனில் வீடியோ பதிவு செய்தனர். கடந்த சில நாட்களாக திம்பம், ஆசனூர் சாலையில் சிறுத்தை உலா வருவதால், வனத்துறையினர் வாகன ஓட்டிகளை எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். வாகனத்தை நிறுத்தவோ, வாகனத்தை விட்டு இறங்கவோ கூடாது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி