இதனால் வீட்டில் தனியாக இருந்த சரோஜினி நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினார். நள்ளிரவில் வீட்க்டுக்குள் ஏதோ சத்தம் கேட்டது. இதனால் திடுக்கிட்டு எழுந்து பார்த்தார். அப்போது வீட்டுக்குள் இருந்து மர்ம நபர் ஒருவர் வெளியே ஓடுவது தெரிந்தது. அதைப் பார்த்து சரோஜினி திருடன்
திருடன் என்று கத்தினார்.
ஆனால் அதற்குள் மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து சரோஜினி வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 13 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது தெரிந்தது. இதுகுறித்து அவர் புஞ்சைபுளியம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் மோப்பநாய் வீரா வந்து வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை பதிவு செய்தனர்.