கடம்பூர் அடுத்த சுஜில்கரை கஞ்சனூர் ரோடு பகுதியை கடம்பூர் போலீசார் நேற்று (ஜனவரி 3) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கடம்பூர் சுஜில்கரை செலுமி தொட்டியைச் சேர்ந்த ரங்கன் என்பவரது மகன் உச்சப்பன் (38) என்பவர் சட்டவிரோதமாக கர்நாடக அரசு மதுபான பாக்கெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, 1,008 மதுபான பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த கடம்பூர் போலீசார் உச்சப்பன் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.