பவானி அருகே உள்ள பிளாட்டினம் மஹாலில் இன்று சமூக நலத்திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர், மாநகராட்சி ஆணையாளர், வருவாய் கோட்டாச்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் வி. சி. சந்திரகுமார், ஏ. ஜி. வெங்கடாசலம், மாநகராட்சி மேயர் சு. நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் வே. செல்வராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.