நடப்பு பருவத்துக்கு தேவையான அளவு இடுபொருட்கள் இருப்பில் உள்ளன. விவசாயிகளின் தேவைக்காக இடுபொருட்கள் அந்தந்த பகுதியில் உள்ள வட்டார துணை வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான அளவு பூச்சி மருந்துகள் ரசாயன உரங்களும் போதுமான அளவு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. பி.எம்.கிசான் திட்டத்தில் ஆதார் எண் விவரங்களை சரிபார்த்து உறுதி செய்தால் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவி தொடர்ந்து பெற முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே இந்த திட்டத்தில் நிதி உதவி பெறும் விவசாயிகள் தங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் சுவர் இடிந்து 7 பேர் உயிரிழப்பு