இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதியருக்கு திருக்கோவிலில் சிறப்பு செய்யும் நிகழ்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில், 12 மூத்த தம்பதியினருக்கு வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண நிகழ்வு நடந்தது. பின்னர் அவர்களுக்கு 2500 ரூபாய் மதிப்பிலான இலவச வஸ்திரங்கள், பழவகைகள் உள்ளிட்ட பொருட்கள் கோவில் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்டன.