ஈரோடு அருகே சிங்கம்பேட்டை பஸ் நிறுத்தத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், ரேஷன் அரிசி மூட்டைகளுடன் காரை பறிமுதல் செய்தனர். காரை ஓட்டி வந்த சக்திவேல், பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வடமாநிலத்தவர்களுக்கு விற்பனை செய்ய கடத்திச் சென்றது தெரியவந்தது. அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 900 கிலோ ரேஷன் அரிசியையும் கைப்பற்றிய போலீசார், சக்திவேலை கைது செய்து, மொத்தம் 1.75 டன் ரேஷன் அரிசியையும் காரையும் பறிமுதல் செய்தனர்.