சக்தியில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த காந்திநகரைச் சேர்ந்தவர் பூபாலன். இவரது மகள் திவ்யதர்ஷினி (17). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ முதலாம் ஆண்டு சேர்வதற்காக அட்மிஷன் போட்டு விட்டு கல்லூரி திறப்புக்காக வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று திவ்யதர்ஷினி திடீரென வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பூபாலன் அளித்த புகாரின் பேரில், சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவி தற்கொலை செய்த காரணத்தை விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி