ஈரோடு: கஞ்சா வைத்திருந்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்

சித்தோடு ஆர்.என். புதூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வாய்க்கால் அருகே முள்புதரில் பதுங்கியிருந்த லோகேஸ்வரன் (23) மற்றும் ஜீவானந்தம் (28) ஆகியோரை சித்தோடு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 கிலோ 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி