ஈரோடு திருநகர் காலனியைச் சேர்ந்த முகமது குத்துசூல் யாசர் அராபத் (40) என்பவர், திருமணம் ஆகாத விரக்தியில் மனநலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 9 ஆம் தேதி அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை உட்கொண்டதால் மயக்கமடைந்த அவரை உறவினர்கள் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.