ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியைச் சேர்ந்த சம்பத் என்பவரின் மகள் ரிதனி ஸ்ரீ (20), கோபியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்துள்ளார். விடுமுறையில் இருந்த அவர், கடந்த 14 ஆம் தேதி தனது அத்தையின் வீட்டிற்கு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரைத் தேடிப் பார்த்தும் கிடைக்காததால், கவலையடைந்த சம்பத், கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.