ஈரோடு: அணைகளில் நீர்மட்டம் உயருமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. 

நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.98 அடியாக இருந்தது. அணைக்கு 916 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. பவானிசாகர் அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி நீரும், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கன அடி நீரும் என மொத்தம் 955 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. 

இதேபோன்று, மாவட்டத்தில் உள்ள குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் 25.70 அடியாக உள்ளது. இதேபோல் வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 23.69 அடியாக உள்ளது. 30 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 15.85 அடியாக உள்ளது. இந்நிலையில், நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் நேற்று மழை பெய்தது.

தொடர்புடைய செய்தி