ஈரோடு-பவானி சாலையில் ரூ. 53 கோடியில் விரிவாக்கப் பணி

ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், ஈரோடு-பவானி சாலை 5.3 கிலோமீட்டர் தூரத்திற்கு ₹53 கோடி செலவில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பரிந்துரைத்த இந்தப் பணியை, அமைச்சர் சு. முத்துசாமி கடந்த மாதம் 6 ஆம் தேதி தொடங்கி வைத்தார். சாலை விரிவாக்கப் பணிகளுக்காக சாலையோர ஆக்கிரமிப்புகள், மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் போன்றவற்றை அகற்ற நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி