ஈரோடு: புலி தாக்கி.. மாடு பலி

தாளவாடி அருகே அருள்வாடி கிராமத்தில் சந்தோஷ் என்பவருக்குச் சொந்தமான மாடு, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலியால் தாக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது. மாலையில் காணாமல் போன மாட்டைத் தேடியபோது, அது இறந்து கிடந்தது தெரியவந்தது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்ததில், புலி தாக்கியதில் மாடு இறந்ததை உறுதி செய்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் விவசாயத் தோட்டங்களுக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி