ஈரோடு: இன்ஜினியரிங் கல்லூரியில் தொழில் முனைவோர் மாநாடு

இன்ஜினியரிங் கல்லூரியில் தொழில் முனைவோர் மாநாடு கோவை அருகே உள்ள தக்குதிரை வெங்கடேஸ்வரா ஹைடெக் இன்ஜினியரிங் கல்லூரியில், சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர் மாநாடு நடந்தது. கல்லூரி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கருப்பண்ணன் எம்.எல்.ஏ., தலைமை வகித்து தொடங்கிவைத்தார். தனியார் நிறுவன முதன்மை அதிகாரி ஆச்சர், சிறு குறு நடுத்தர தொழில் மேம்பாட்டு சென்னை மையப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்குமார், பழனிச்சாமி பேசினர். சிறப்பாக செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கு விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்வில் கல்லூரித் தலைவர் வெங்கடாசலம், இணைச் செயலாளர் கெட்டிமுத்து, தலைமை நிர்வாக அதிகாரி கவுதம், இயக்குநர் கவியரசு, சிறுகுறு நிறுவன நிர்வாகிகள் மேலாண்மைத் துறை மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கல்லூரி முதல்வர் தங்கவேல் வரவேற்றார். எந்திரவியல் துறைத் தலைவர் மோகன்குமார் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி