அந்தியூர் அருகே லாரி மோதி கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

அந்தியூர் அருகே தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (19), பவானி காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த சௌபர்ணிகா (19) ஆகிய இருவரும் கல்லூரி மாணவர்கள். இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் அந்தியூரிலிருந்து பவானி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, செலம்பகவுண்டன்பாளையம் என்ற இடத்தில் எதிரே வந்த டிப்பர் லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகினர். இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து பவானி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி