பவானி: வீட்டில் அழுகிய நிலையில் மூதாட்டி சடலம்

பவானி, சித்தோடு அருகே தனியாக வசித்து வந்த 80 வயது மூதாட்டி விஜயமணி, வீட்டில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாதந்தோறும் வரும் முதியோர் உதவித்தொகையை நம்பி வாழ்ந்து வந்த இவருக்கு, மகன் அவ்வப்போது வந்து பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார். மூன்று நாட்களாக வெளியே வராததால் சந்தேகம் அடைந்த வீட்டு உரிமையாளர், மூதாட்டியின் மகனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் வந்து பார்த்தபோது, படுக்கையில் அழுகிய நிலையில் உடல் கிடந்துள்ளது. சித்தோடு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி