இந்நிலையில் பண்ணாரி சோதனைச் சாவடி அருகே இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த வாகனங்கள் அனைத்தும் பண்ணாரி சோதனைச் சாவடி அருகே சாலையோரம் ஆங்காங்கே வாகன ஓட்டிகள் நிறுத்திவைத்துள்ளனர். அந்த வழியாக அவசரத் தேவைக்கு ஆம்புலன்ஸ்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
இன்று காலை தாளவாடியில் நோயாளி ஒருவரை அழைத்துக் கொண்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்குச் செல்வதற்காக பண்ணாரி சோதனைச் சாவடியைக் கடந்து சென்றது. அப்போது வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டதால் ஆம்புலன்ஸால் அந்தச் சாலையைக் கடந்து செல்ல முடியாமல் நோயாளி அவதிப்பட்டார். வாகன ஓட்டிகள் இரவு முதல் காலை வரை தங்களது வாகனங்களைச் சாலையோரம் வரிசைமுறை இன்றி ஆங்காங்கே நிறுத்திவைத்துள்ளனர். இதனால் அந்த வழியாக அவசரத் தேவைக்கூட கடந்து செல்ல முடியவில்லை. உரியவர்கள் கூடுதல் கவனம் செலுத்தி வாகனங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றனர்.