மத்திய அரசு கொண்டுவந்த 125 நாள் உறுதி வேலைவாய்ப்பு திட்டத்தை சீர்குலைக்கும் வகையில் திமுக அரசு செயல்படுவதாகக் கூறி, ஈரோடு மாவட்டம் பவானி யூனியன் ஆபீஸ் அருகே மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கேசி கருப்பண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிப் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டு திமுக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.