இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வங்கி கணக்கில் வரவு செலவை ஆய்வு செய்த போது முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதை அடுத்து லாரி உரிமையாளர்கள் அசோசியேஷன் நிர்வாகிகள் இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் 2022 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கணக்காளர் ஜெயசீலன் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அதாவது போலி கணக்கை காண்பித்து அசோசியேஷன் வங்கி கணக்கில் உள்ள பணத்தை தனது சொந்த வங்கி கணக்கில் மாற்றி ரூ.1.86 கோடி வரை மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதை அடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயசீலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.