ஈரோடு: குட்கா, லாட்டரி, கஞ்சா விற்ற 8 பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில் குட்கா, லாட்டரி, கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பவானியில் லாட்டரி விற்ற சண்முகம், கந்தசாமி கைது செய்யப்பட்டு, லாட்டரி சீட்டுகள், ரொக்கம், இருசக்கர வாகனம், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நம்பியூர், கோபி, பெருந்தலையூர் பகுதிகளைச் சேர்ந்த கிரிராம், சையது முஸ்தபா, முகமது அப்துல், வேலுமணி ஆகியோர் குட்கா விற்றதாக கைது செய்யப்பட்டனர். சிவகிரியில் கஞ்சா விற்ற அர்ஜூன், வேல்முருகன் கைது செய்யப்பட்டு, 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி