ஈரோடு சக்தி மசாலா நிறுவனங்களின் நிறுவனரும், டாக்டர் பி.சி. துரைசாமியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு, பெருந்துறை சென்னிமலை கவுண்டர் செல்லம்மாள் திருமண மாளிகையில் பவள விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு யாக பூஜைகள், கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், ஆயுஷ்ய ஹோமம் ஆகியவை பழனி தண்டாயுதபாணி ஸ்வாமி தேவஸ்தான அர்ச்சகர் செல்வசுப்ரமண்ய சிவாச்சார்யார் தலைமையில் நடத்தப்பட்டன. பல்வேறு கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள், தொழில் வணிக சங்கங்களின் தலைவர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். சக்தி மசாலா நிறுவனத்தின் டாக்டர் சாந்தி துரைசாமி மற்றும் குடும்பத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.