அம்மாபேட்டை அடுத்த நாதமேட்டு பிரிவு பகுதியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக, நேற்று முன்தினம் அம்மாபேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அங்கு சென்ற போலீசார், சீட்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் மேற்கொண்ட விசாரணையில், பூனாச்சி அடுத்த முகாசிபுதூர் பகுதியைச் சேர்ந்த முருகன் (33), செம்பன்னன் (55), சத்திவேல் (32) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.