இதனையடுத்து, மது விற்பனையில் ஈடுபட்டவரை பிடித்து விசாரித்தனர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (35) என்பது தெரியவந்தது. பின்னர், அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று, சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் பகுதியில் கோபி மதுவிலக்கு போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கோவை மாவட்டம் சீதாப்புதூரைச் சேர்ந்த சம்பத்குமார் (35) என்பவரை மது விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த கர்நாடக மதுபானங்கள் 5 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.