ஈரோடு: பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த 13 கடைகளுக்கு அபராதம்

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், ஆணையர் மனிஷ் உத்தரவின் பேரில், ஈரோடு மாநகராட்சி 1-வது மண்டலத்துக்கு உட்பட்ட வைரபாளையம், வீரப்பன்சத்திரம், சுண்ணாம்புஓடை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 36 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், 13 கடைகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 4 கிலோவை பறிமுதல் செய்த அதிகாரிகள், ரூ.3,700 அபராதம் விதித்தனர்.

தொடர்புடைய செய்தி