தாமரை பாளையத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது

கொடுமுடி அடுத்த தாமரைபாளையம் அருகேயுள்ள அணில்காட்டு தோட்டத்தில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கொடுமுடி போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அப்பகுதியில் நேற்று போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர்.

அவர்களை விரட்டிப் பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், வடக்குபுதூர்பாளையத்தைச் சேர்ந்த முத்துக்குமார் ( 34), நாமக்கல் மாவட்டம் போத்தனூர் சேர்ந்த ராமலிங்கம் (60), சோளசிரமணியைச் சேர்ந்த ராஜேந்திரன் (60), சென்னை வ. உ. சி நகரைச் சேர்ந்த முருகன் (52), முனியப்பன் (66), கொடுமுடியை அடுத்த மாணிக்கம் (60), அண்ணமார் கோவிலைச் சேர்ந்த மேகநாதன் ( 33), ஊஞ்சலூரைச் சேர்ந்த பாபு ( 51), பெரும்பாளையத்தைச் சேர்ந்த சங்கர் ( 34), மயில்சாமி (39), வடுக்கு புதுப்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் (45) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்கள் 11 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த சீட் கட்டுக்களையும், ரூ. 2000 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்

தொடர்புடைய செய்தி