ஈரோடு: கஞ்சா விற்பனை டெலிவரி ஊழியர் மற்றும் இருவர் கைது

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே ஆப்பக்கூடல் ஒரிச்சேரிப்புதூரில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை நடத்தினர். இதில், ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்த ஜோமாட்டோ டெலிவரி ஊழியர் ஸ்ரீதர், பெட்ரோல் பங்க் ஊழியர் கவின், பெயிண்டர் நவீன் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி