அந்தியூர் அருகே ரத்த அணுக்கள் குறைபாடு காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முருகேஷ் (21), மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உயிரிழந்தார். பெற்றோர் கண்டித்ததால் கோபித்துக்கொண்டு ஊர் திரும்பிய அவர், அந்தியூர் பேருந்து நிலையத்தில் மயங்கி கிடந்த நிலையில் மீட்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.