பர்கூர் அருகே தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

அந்தியூர் அடுத்த பர்கூர், சிவனஜ்ஜனூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகேஷ் (41). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நாகேசுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இது தொடர்பாக அவரது மனைவி கேட்டபோது தான் அப்படித்தான் குடிப்பேன் என்று மனைவியிடம் நாகேஷ் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நாகேஷ் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். 

அவரது மனைவி மகன் கல்லூரிக்கு செல்ல வேண்டும் அதற்கு பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு நாகேஷ் தன்னிடம் பணம் இல்லை என்று கூறி வீட்டில் உள்ள அறையில் பதவை பூட்டி உள்ளே சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து அவரது மனைவி கணவரை சாப்பிட கூப்பிடுவதற்காக அறைக்கு சென்று கதவை தட்டியுள்ளார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கணவர் நாகேஷ் அங்குள்ள விளக்கில் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதைத்தொடர்ந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே நாகேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி