சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே கோவிந்தபாடி அரிசி பாளையத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி தங்கம்மாள் (45), தனிமையில் இருந்ததால் மனநலம் பாதிக்கப்பட்டு காணாமல் போனார். 4 நாட்களுக்கு முன்பு காணாமல் போன அவர், அந்தியூர் அருகே உள்ள வனப்பகுதியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பர்கூர் போலீசார் அழுகிய நிலையில் இருந்த பிரேதத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.