அந்தியூர் பேரூராட்சியில் குடிநீர் திட்ட பணிகள்

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வர் இன்று காணொளி காட்சி வாயிலாக, ஈரோடு மாவட்டம் அந்தியூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் 23 கோடியே 97 லட்சம் மதிப்பீட்டில் நிறைவடைந்த அம்ரூத் 2.0 குடிநீர் திட்டப் பணியினைத் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, அந்தியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்எல்ஏ ஏ.ஜி. வெங்கடாசலம் திட்டப் பணிகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கினார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், கழகச் செயலாளர், பேரூராட்சிகள் துறை செயற்பொறியாளர், செயல் அலுவலர், மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி