அந்தியூரில் போதை மாத்திரை விற்பனை: இளைஞர்கள் கைது

ஈரோடு மாவட்டம் அந்தியூரில், போதை மாத்திரை விற்பனை செய்ததாக மதன் குமார் (18) மற்றும் தீபக்குமார் (21) ஆகிய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக்கிற்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், விற்பனைக்காக வைத்திருந்த 100 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி