அந்தியூர் அருகே ஜி.எஸ். காலனியைச் சேர்ந்த கலைச்செல்வன் (27), தனியார் கார் ஷோரூமில் சீனியர் டெக்னீசியனாகப் பணிபுரிந்து வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை (19 ஆம் தேதி) அன்று, வீட்டில் இருந்து அந்தியூருக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, புதுமாரியம்மன் கோவில் அருகே முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் திடீரென வலதுபுறம் திரும்பியதால், கலைச்செல்வன் மீது மோதி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவர் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் ஆறு பேருக்கு தானமாக வழங்கப்பட்டன.