கெட்டி சமுத்திரம் ஏரியில் மரங்கள் எரிந்து சாம்பல்

கெட்டிசமுத்திரம் ஏரிக்கரையில் மக்காத கழிவுகளை கொட்டி எரிப்பதால் பத்துக்கும் மேற்பட்ட மரங்கள் கருகியுள்ளன. ஒதுக்குப்புறமான இப்பகுதியில் கோழிக்கழிவுகள், மக்கும் மக்காத குப்பைகள் மற்றும் செப்டிக் டேங்க் கழிவுகளையும் கொட்டி தீ வைப்பதால், வேம்பு, வெள்ளைவேலன், கருவேல மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கோடை காலம் என்பதால் தீ பரவி நூற்றுக்கணக்கான மரங்கள் அழிவதோடு, விவசாய தோட்டப் பயிர்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.  கழிவு கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி