ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, 150 ஆண்டுகள் பழமையான அரச மரத்தை வெட்டக்கூடாது என ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தினர். அதே சமயம், வேர்கள் வீடுகளைப் பாதிப்பதாகக் கூறி மரத்தை அகற்றக் கோரிக்கை விடுத்த மற்றொரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். வனத்துறை அனுமதி அளித்த நிலையில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில், போலீசார் மற்றும் வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மரத்தின் மேல் பகுதிகளை வெட்டினர்.