அந்தியூர் நகலூரில் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது

அந்தியூர் அருகே நகலூரில் வேளாண்மை துறையின் சார்பில் விலை நிலங்களை காப்போம் இயக்கம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வேளாண்மை உதவி இயக்குனர் முரளி தலைமை தாங்கி, உயிர் உரங்களின் பயன்கள், மின்னோட்டம், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் மற்றும் அவற்றின் பயன்பாட்டு முறைகள் குறித்து விளக்கினார். கோபி வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி சீனிவாசன், மண் பரிசோதனை செய்து, அதன் அடிப்படையில் தேவையான உரங்களை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி