அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து சோதனையிட்டதில் அந்த காரில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருள்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா, அத்தாணி, விநாயகர் கோயில் வீதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (43) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 7,200 மதிப்பிலான சுமார் 8 கிலோ புகையிலை பொருள்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
கோபி
கிறிஸ்மஸ் தின சிறப்பு நிகழ்ச்சி