அந்தியூரில் மிகவும் ஆபத்தான மரம்

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் உள்ள ரவுண்டானா பகுதியில் பல மாதங்களாக உயரமான, பழமையான பட்டுப்போன மரம் ஒன்று உள்ளது. பலத்த காற்று வீசும்போது, அதிக போக்குவரத்து நிறைந்த அந்தப் பகுதியில் மரம் விழுந்தால் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்களின் நலனைக் கருதி அந்த மரத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி